Wednesday, 14 December 2022

Village health Nurse(Mrs S Jayalakshmi of Morai and Kollumedu) and social worker of rural ‘PHC’ wins great praise for ‘Health Networking’ of delicate group through Whatsapp!


  

Village health Nurse(Mrs S Jayalakshmi of Morai and Kollumedu)  and social worker of rural ‘PHC’ wins great praise for ‘Health Networking’ of delicate group through Whatsapp!

-------------------

Sister S. Jayalakshmi the Village Health Nurse and Social Worker attached to the Vellanur Health Sub Center and Morai and Kollumedu Public Health Center (PHC) who won great laurels, recognitions and awards for her tireless and dedicated service to Covid-19 victims during the peak of the first and second waves of the pandemic.

Nurse Jayalakshmi had in a most thoughtful gesture started the ‘Mother and Child Whatsapp group’ to facilitate continuous communication and counseling on medication, hygiene, social distancing, nutrition etc to Covid effected patients during the peak of the lockdown when physical movement was strictly restricted. It called for great effort and initiative to educate the rural women and familiarize them on the usage of this social media platform to receive and send critical messages pertaining to prevention and care of Corona. After the threat of Covid receded to the background Sister Jayalakshmi realized that this constant interaction, knowledge and awareness dissemination and updating to the local womenfolk, mainly expectant mothers and those who have just delivered, could continue to be put to great use in terms of sending regular alerts on date/ time/venue of various immunity dosages for the newborn, Covid booster shots, nutrition during pregnancy and after delivery, baby care, yoga for safe and painless delivery, importance of breastfeeding, RCHID Card and its importance etc through videos made by her.

 

Sister Jayalakshmi also updates her ‘Child and mother group’ with latest healthcare news in regional news and Govt of Tamilnadu`s Health dept - Health related guidelines through online flyers and posters etc.

 

Sister Jayalakshmi has always been a favourite of the locals, the beloved nurse Amma, Sister, Jeya Akka to the rural community living in and around Vellanur and other villages surrounding Avadi and this most thoughtful initiative has made her all the more popular with them and has also won high praise from NGOs, Health Department and the public at large. Mrs Jayalakshmi Can be reached at 97102 44215

Sunday, 16 October 2022

சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் வழங்கும் இலவச மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி

 


சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் வழங்கும்  

இலவச மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே

 

---------------------

ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும். கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளின் சொந்த பாடங்களில் சிறப்பாக உள்ளார்கள் ஆனால் சாப்ட் ஸ்கில் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி (மென்மையான/வாழ்க்கை/வேலைவாய்ப்பு/தொழில்முனைவோர் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி.)  அவர்களிடம் குறைவாகவே உள்ளது. அதனை  கருத்தில் கொண்டு சென்னை டுவின்டெக் அகாடமி மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி முறையை நடத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது

  

வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறமை எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்பவர் களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியம் ஆகும்.

மாணவர்களின் வசதியை கருத்திற்க்கொண்டு 6 வார  இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12 மணி வரை) அமைத்து  வகுப்புகளாக வழங்குகிறது.

 

இந்த பயிற்சி திட்டத்தில் பங்குகொள்ள விருப்பும் கல்லூரி மாணவ - மாணவிகள் 9710485295 / 98400 23411 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது info@chennaitwintech.com மின்னஞ்சல் மூலமோ அக்டோபர் 31,2022 ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்.

 

பதிவு செய்வதற்கான ஆன்லைன் இணைப்பு : https://bit.ly/3eEW6x2

---------------------------

டாக்டர் அ மகாலிங்கம்

இயக்குனர்

டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்

இணையம்: www.chennaitwintech.com

மொபைல் எண் / வாட்ஸ்அப் : 97104 85295


Saturday, 17 September 2022

திருமண விழாவில் கண் தானம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி

 

திருமண விழாவில் கண் தானம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி

கண் மருத்துவத்தின் வல்லுனரும் கல்வியாளரும் சமூக சேவகர் மருத்துவத்துறை ஜாம்பவான் மதிப்பிற்குரிய டாக்டர் அ.மகாலிங்கம்  தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பார்வை இழப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக செய்திருந்தது அனைவரும் நெகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்

 

கண் சிகிச்சையின் மிகச்சிறந்த வல்லுநரும் இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு சங்கங்களின் பொதுச் செயலாளராக இருக்கும் டாக்டர் அ மகாலிங்கம் அவர்களின புதல்வி திரு நிறை செல்வி எம். மானசி (கண் பரிசோதனை செய்வதில் முதுநிலை பட்டம் )    - விக்னேஷ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 08 .09 .2022 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 இந்த விழாவில் கண் மருத்துவத்தின் வல்லுனர் டாக்டர் அ மகாலிங்கம் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் கண்ணை பாதுகாப்பது பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் பார்வை இழப்பை தடுப்பது குறித்த அவருடைய பேச்சும் வரவேற்க வைத்திருந்த பதாகைகளுடன் அதற்கான விழிப்புணர்வு வாசகங்களும் மற்றும் கண் தானத்தின் சிறப்பு அம்சங்களை பற்றியும் அதற்கான உறுதி மொழி எடுக்க வைத்தது ஆசிரியப்பட வைத்தது.

 இந்த மருத்துவத்துறையில் அவர் வைத்திருக்கும் ஆர்வத்தையும் இந்த மக்களின் மேல் வைத்திருக்கும் அன்பாலும் பார்வை இழப்பை முற்றிலும் தவிர்க்கும் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் கண் மருத்துவ வல்லுநர் அ மகாலிங்கம் அவர்கள் செய்திருந்தது மருத்துவத்துறைக்கும்  மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக இருந்தது என்பதை அனைவரும்  மகிழ்ந்து பாராட்டி சந்தோசத்துடன் வாழ்த்தினார்

மேலும் தொடர்ந்து நமது மருத்துவ வல்லுநர் அவர்கள் பத்திரிகைகளுக்கும் மிகச் சிறந்த முறையில் அதற்கான கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்றார்  கண் மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றியும் முக்கியத்துவத்தையும் பற்றியும் கண் தானத்தை பற்றியும் தொலைக்காட்சியின் வாயிலாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பார்வை இழப்பு தடுப்பின் முகாம்களை ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக செய்து எண்ணற்றவர்களை கண் தானம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் இதன் மூலம் கண் பார்வையற்றவர்கள் கண் ஒளி பெற்று மகிழ்ச்சியடைந்து வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.  

அ மகாலிங்கம் அவர்களின் செயல்களும் நல்ல நோக்கங்களும் செயல் திட்டங்களும் தொடர்ந்து இயங்கி வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றது.

அ மகாலிங்கம் அவர்களை வாட்ஸாப்ப் 97104 85295 / மின்னஞ்சல் : mahali@mahali.in மூலம் தொடர்பு கொள்ளலாம்.